23 நாள்களுக்கு பிறகு சந்திரபாபு நாயுடுவுக்கு க்ரீன் சிக்னல்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இந்திய மாநிலம், ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி ஆந்திர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு கைது
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு. இவர் ஆந்திராவில், கடந்த 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்தார். இவருடைய பதவிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சில ஆண்டுகளாக இதற்கான விசாரணையை சி.ஐ.டி நடத்தி வந்த நிலையில் செப்டம்பர் 9 -ம் திகதி சந்திரபாபு நாயுடு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
பிரார்த்தனை கூட்டத்தில் உயிர் தப்பிய குண்டு வைத்தவரின் மாமியார்: மனைவியின் செல்போனுக்கு அழைத்து எச்சரிக்கை
பின்பு, விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
இதனையடுத்து, சந்திரபாபு நாயுடுவை வீட்டு சிறையில் அடைக்க கோரிய மனுவை நீதிமன்றம் நிராகரித்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அவரது ஜாமின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் கோரிய வழக்கில் 4 வார காலம் நிபந்தனை ஜாமின் அளித்து ஆந்திர நீதிமன்றம் உத்தரவிட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |