நாட்டை கேட்கும் டிரம்பிற்கு 6 வார்த்தைகளில் பதில்: கிரீன்லாந்து பிரதமரின் வீடியோ
நாட்டைக் கைப்பற்றும் முயற்சிகளுக்கு இடையே டொனால்டு டிரம்பிற்கு கிரீன்லாந்து பிரதமர் பதில் கொடுத்துள்ளார்.
கிரீன்லாந்தை வாங்குவதில் ஆர்வம்
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவான டொனால்டு டிரம்ப் (Donald Trump) வரும் 20ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார்.
அவர் கிரீன்லாந்து பிரதேசத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாக கூறியது சர்வதேச அளவில் பேசுபொருளானது.
ஆனால், கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்று சமீபத்தில் பிரதமர் Mute B.Egede தெரிவித்தார்.
அமெரிக்கர்களாக இருக்க விரும்பவில்லை
இந்த நிலையில், Egede ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த நேர்காணலில் டிரம்பிற்கு பதில் கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், "நாங்கள் எப்போதும் நேட்டோவின் ஒரு பகுதியாக இருப்போம். நாங்கள் எப்போதும் அமெரிக்காவிற்கு ஒரு வலுவான கூட்டாளியாக இருப்போம். நாங்கள் நெருங்கிய அண்டை நாடுகள், கடந்த 80 ஆண்டுகளாக நாங்கள் ஒத்துழைத்து வருகிறோம். எதிர்காலத்தில் ஒத்துழைக்க நிறைய இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், ஆனால் நாங்கள் தெளிவாக இருக்க விரும்புகிறோம்" என்றார்.
SEEING GREEN: Greenland’s Prime Minister Múte Egede speaks exclusively to @BretBaier about President-elect Trump’s pursuit of the island, saying he values America as a partner and wants to see Greenland become an independent country. pic.twitter.com/cV3nbvySjA
— Fox News (@FoxNews) January 17, 2025
மேலும், "நாங்கள் அமெரிக்கர்களாக இருக்க விரும்பவில்லை. நாங்கள் அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை, ஆனால் அமெரிக்காவுடன் இணைந்து வலுவான ஒத்துழைப்பை விரும்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |