லண்டன் உள்ளாட்சித் தேர்தல்கள்: ஆளுங்கட்சிக்கு சவாலாக அமையப்போகும் கட்சிகள்
மே மாதம் லண்டன் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சிக்கு சில கட்சிகள் பெரும் சவாலாக அமையப்போவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
லண்டன் உள்ளாட்சித் தேர்தல்கள்
மே மாதம் 7ஆம் திகதி லண்டனிலுள்ள 32 கவுன்சில்களிலும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

இந்நிலையில், கிரீன்ஸ் கட்சியும், நைஜல் ஃபராஜின் யூகே ரீஃபார்ம் கட்சியும் ஆளும் லேபர் கட்சிக்கு பெரும் சவாலாக அமையும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, நீண்ட காலமாக லேபர் கோட்டையாக இருக்கும் Hackney, Lambeth, Lewisham மற்றும் Waltham Forest ஆகிய தொகுதிகளில் கிரீன்ஸ் கட்சி அதிக அளவில் வாக்குகளைப் பெறக்கூடும் என YouGov ஆய்வமைப்பு தெரிவித்துள்ளது.

அதேபோல, லேபர் கட்சி வசம் உள்ள Barking and Dagenham மற்றும் கனர்வேட்டிவ் கட்சி வசம் உள்ள Bromley, மற்றும் Havering ஆகிய தொகுதிகளில் யூகே ரீஃபார்ம் கட்சி பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்கின்றன ஆய்வு முடிவுகள்.
ஆக, இம்முறை நடைபெற இருக்கும் தேர்தலில், பல்வேறு சிறிய கட்சிகளுக்கு வாக்குகள் சிதறும் என்றும், சிறிய எண்ணிக்கையிலான வாக்குகள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் நிலை ஏற்படலாம் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
2022இல் லேபர் கட்சி 21 கவுன்சில்களை கைப்பற்றிய நிலையில், இம்முறை அக்கட்சி 15 இடங்களை மட்டுமே கைப்பற்றக்கூடும் என்றும், அந்த 15 தொகுதிகளில் 12இல், கிரீன்ஸ் கட்சி இரண்டாவதாக வரும் என்றும் கூறியுள்ளன ஆய்வு முடிவுகள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |