இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு; கிரேட்டா துன்பெர்க் மீது டெல்லி பொலிஸ் வழக்குப்பதிவு
இந்தியாவில் பல மாதங்களாக நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்ட கிரேட்டா துன்பெர்க் மீது டெல்லி பொலிஸ் FIR பதிவு செய்துள்ளது.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 18 வயதான க்ரெட்டா துன்பெர்க் உலக பருவநிலை மாற்றம் குறித்து பிரச்சரம் செய்யும் இளம் சமூக ஆர்வலராக உலகம் முழுவதும் அறியப்படுகிறார்.
அவர் தற்போது இந்திய தலைநகரான டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு உதவ நினைப்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்று ஒரு தவறான 'ToolKit' லிங்கை பதிவிட்டார். பின்னர் அது நீக்கப்பட்டது.
இந்நிலையில், போராட்டத்தை துண்டும் வகையில் அவர் சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிர்ந்ததற்காக கிரேட்டா மீது டெல்லி பொலிஸார் FIR பதிவு செய்துள்ளனர்.
அவர் மீது கிரிமினல் சதி, பல்வேறு சமூகக்ங்களுக்கு இடையில் வெறுப்பை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் "நான் இன்னும் விவசாயிகள் மற்றும் அவர்களது அமைதியான போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவளிக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
I still #StandWithFarmers and support their peaceful protest.
— Greta Thunberg (@GretaThunberg) February 4, 2021
No amount of hate, threats or violations of human rights will ever change that. #FarmersProtest
