இளம் சமூக ஆர்வலர் கிரேட்டா துன்பெர்குக்கு இப்படி ஒரு சகோதரியா?
2019ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி, நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை உச்சி மாநாட்டில் கூடியிருந்த உலகத் தலைவர்களிடையே கிரேட்டா துன்பெர்க் என்னும் 16 வயது சிறுமி உரையாற்றினார்.
உலகத் தலைவர்கள் பருவநிலை மாற்றம் குறித்த செயலற்ற தன்மையால் தனது கனவுகளையும் தனது குழந்தைப் பருவத்தையும் திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், ஐ.நா சபையில் தனது உரையை ஒரு உணர்ச்சிபூர்வமான அறிமுகத்துடன் தொடங்கினார், இது ஊடகங்களால் பரவலாகப் பேசப்பட்டது.
’இவை எல்லாமே தவறு, நான் இங்கே இருக்கக் கூடாது. நான் கடலின் மறுகரையில் பள்ளியில் இருக்க வேண்டும். ஆனாலும் நீங்கள் அனைவரும் இளைஞர்களாகிய எங்களிடம் நம்பிக்கைக்காக வருகிறீர்களா?
உங்களுக்கு எவ்வளவு தைரியம்! உங்கள் வெற்று வார்த்தைகளால் என் கனவுகளையும் என் குழந்தைப் பருவத்தையும் திருடிவிட்டீர்கள். ஆனாலும் நான் அதிர்ஷ்டசாலிகளில் ஒருத்தி. மக்கள் துன்பப்படுகிறார்கள்.
மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். முழு சுற்றுச்சூழல் அமைப்புகளும் அழிந்து வருகின்றன. நாம் ஒரு பெரிய அழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம்.
என்றாலும், நீங்கள் பேசக்கூடியது எல்லாம் பணம் மற்றும் நிரந்தர பொருளாதார வளர்ச்சியின் கற்பனைக்கதைகள் மட்டுமே. உங்களுக்கு எவ்வளவு தைரியம்! என முழங்கினார் கிரேட்டா. அவரது சமூக சேவை தொடர்கிறது.
கிரேட்டா துன்பெர்குக்கு இப்படி ஒரு சகோதரியா?
ஆனால், சமூக சேவை செய்யும் கிரேட்டாவுக்கு ஒரு சகோதரி இருக்கிறார்.
கிரேட்டா மீதான கோபத்தை அவரது தங்கை மீதும் பலர் காட்டினார்கள். அது அவர்களை பாதித்ததை மறுப்பதற்கில்லை.
இந்நிலையில், தற்போது தன் அக்காவிடமிருந்து விலகியுள்ள அவர், தனது அக்காவுக்கு நேர்மாறாக, கவர்ச்சி உடை அணிந்து பொப்பிசைப் பாடகியாகும் ஆசையில் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டுவருகிறார்.
என்றாலும், தன் அக்காவின் பெயருக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக, பீட்டா துன்பெர்க் (19) என்னும் தன் பெயரை பீ எர்னாம் (Bea Ernam) என மாற்றிக்கொண்டு, இணையத்தை தனது கவர்ச்சிப்படங்களால் நிறைத்துக்கொண்டிருக்கிறார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |