இளம் வயதிலேயே நரைமுடியால் அவதியா? இந்த வீட்டு வைத்தியமே போதும்
பெரும்பாலான இளைஞர்கள் தற்போது நரை முடி பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள்.
இளநரை
இதற்கு ஆரோக்கியமற்ற உணவு முறை, ரசாயனம் கலந்த ஷாம்புகள் பயன்படுத்துதல் போன்றவை வெள்ளை முடி வருவதற்கு காரணமாக அமைகிறது. இதனை போக்க எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல், தலைமுடி கருப்பாகும் வீட்டு வைத்தியம் குறித்து பார்ப்போம்.

தேங்காய் எண்ணெய் மற்றும் நெல்லிக்காய் பொடியை சம அளவில் கலந்து சூடாக்க வேண்டும். பின் ஆறவைத்து இந்த கலவையை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இது முடியை கருமையாக்கும்.
கறிவேப்பிலையை தயிருடன் அரைத்து வாரத்தில் 1 முறை முடிக்கு தேய்க்கலாம். தேங்காய்ப் பாலில் எலுமிச்சை சாறு கலந்து தடவலாம்.

வெந்தயத்தை அரைத்து தடவினாலும் முடி வலிமையாகும்.
வெங்காய சாற்றில் தேன் கலந்து தலையில் தடவி 30 நிமிடம் ஊறவைத்து குளிக்கலாம்.
காபி பொடியில் மருதாணி பொடியை கலந்து பேஸ்ட் செய்து, முடியில் தடசி வர, கருமையாக்கி, பளபளப்பாகும்.