போர்க்கால ஒத்திகையில் பங்கேற்க மணப்பெண்ணை 2 மணி நேரம் காத்திருக்க வைத்த மணமகன்
போர்க்கால ஒத்திகையில் பங்கேற்க மணமகன் ஒருவர் திருமண கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளார்.
தேசம் தான் முதலில்
இந்திய மாநிலமான பீகார், பூர்னியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஷாந்த் குஷ்வாஹா. இவருக்கு மே 7-ம் திகதி அன்று திருமணம் நடைபெற்றது.
இதனால் மாலை 6 மணிக்கு அராரியா மாவட்டத்தில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள மணப்பெண்ணில் வீட்டில் "பராத்" எனப்படும் திருமண கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு மணமகன் சுஷாந்த் குஷ்வாஹா செல்ல வேண்டியிருந்தது.
ஆனால் அவர் அங்கு செல்லாமல் தனது பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்பதாக உறவினர்கள் மற்றும் மணமகளை 2 மணி நேரம் காக்க வைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "இன்று என்னுடைய திருமணம், ஆனால் அது மட்டுமே எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விடயம் அல்ல. தேசம் தான் எனக்கு முதலில். போர்க்கால ஒத்திகையில் நானும் ஒரு அங்கமாக இருந்தது பெருமையாக உள்ளது.
ராணுவ வீரர்கள் திருமணம் நடக்கும் இடத்தை விட்டு எல்லைகளில் சண்டையிடச் செல்வார்கள். சூழ்நிலை ஏற்பட்டால் நாமும் அவ்வாறு செய்ய வேண்டும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |