வரதட்சணையுடன் தப்பியோடிய மாப்பிள்ளை! துரத்தி பிடித்து திருமணம் செய்த மணப்பெண்.. வைரல் வீடியோ
வரதட்சணையாக பெரிய தொகை மற்றும் பைக்கை வாங்கி கொண்டு நிச்சயித்த பெண்ணை மணக்காமல் தப்ப முயன்ற இளைஞரை மணப்பெண் துரத்தி பிடித்து திருமணம் செய்து கொண்ட விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது.
பீகாரின் மஹுலி கிராமத்தைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கும், மெஹ்கர் கிராமத்தைச் சேர்ந்த அந்த நபருக்கும் திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்பே நடைபெறுவதாக இருந்த கல்யாணத்தை அந்த மணமகன் தொடர்ந்து தள்ளிப்போட்டு வந்திருக்கிறார். இதுபோக, பெண் வீட்டார் அந்த மணமகனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்து ஒரு பைக்கையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
இதையெல்லாம் பெற்றுக் கொண்ட பிறகு நிச்சயிக்கப்பட்டபடி கல்யாணம் செய்துக் கொள்ளாமல் இதோ அதோ என காரணம் சொல்லி தப்பித்து வந்திருக்கிறார். இப்படி இருக்கையில், தனது பெற்றோருடன் மார்க்கெட்டிற்கு சென்ற அந்த மணமகள், சந்தையில் அந்த நபரை பார்த்ததும் தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி கேட்டிருக்கிறார்.
एक शादी ऐसा भी
— Exclusive Post (@xclusivepost) August 28, 2022
जब शादी करने से भाग रहा था लड़का, तब लड़की ने उसे खुद पकड़कर रचाई शादी
मामला #बिहार के #नवादा का है। लड़की ने कहा कि पैसा और बाइक लेकर शादी करने से भाग रहा था लड़का#ExclusivePost#xclusivepost pic.twitter.com/LSpch8Sp5a
ஆனால் அந்த நபரோ அவ்விடத்தை விட்டு ஓட்டம்பிடிக்கவே, அவரை விரட்டியடி அப்பெண்ணும் பின்னாலேயே ஓடியிருக்கிறார். உள்ளூர் வாசிகளின் உதவியுடன் ஒரு வழியாக அந்த நபரை பிடித்த அப்பெண் தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி கேட்டிருக்கிறார்.
இருப்பினும் எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்றே அந்த நபர் முற்படிருக்கிறார். அப்போதுதான் அந்த நபர் வேண்டுமென்றே கல்யாணத்தை ஒத்திப்போட்டது அம்பலமாகியிருக்கிறது.
பொதுவெளியில் இந்த விவகாரம் பூதாகரமானதும், சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சம்மந்தப்பட்டவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.