திருமணத்துக்கு முந்தைய தினம் கொல்லப்பட்ட மணமகன்: அதிர்ச்சிப் பின்னணி
இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில், திருமணத்துக்கு முந்தைய தினம் மணமகன் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருமணத்துக்கு முந்தைய தினம் கொல்லப்பட்ட மணமகன்
இம்மாதம், அதாவது, மே மாதம் 13ஆம் திகதி, Dwarka என்னுமிடத்தில் அவ்னீஷ் சக்ஸேனா என்பவர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அடுத்த நாள் அவருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், சக்ஸேனா உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியது.
இந்நிலையில், CCTV காட்சிகளின் அடிப்படையில், சம்பவம் நடந்த பகுதியில் நடமாடிய இஷாந்த் பாஸ்வான் (19), ராகுல் சஞ்சீவ் (24), விஷால் சிங் மற்றும் தேவேந்தர் சிங் (24) ஆகியோரைப் பிடித்து பொலிசார் விசாரித்துள்ளனர்.
அந்த நான்கு பேரில் ஒருவரான பாஸ்வான், சக்ஸேனா திருமணம் செய்துகொள்ள இருந்த பெண்ணின் சகோதரர் என்பது தெரியவந்தது.
மேலதிக விசாரணையில், பாஸ்வானின் சகோதரியை தனக்கு திருமணம் செய்துவைக்குமாறு சக்ஸேனா கட்டாயப்படுத்தியதும், அந்தப் பெண்ணுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று தெரிந்தும், திருமணத்துக்கு மறுத்தால், தாக்குதல் நடத்துவதாகவும், அவமானப்படுத்துவதாகவும் மிரட்டியதும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து சக்ஸேனாவின் தொலைபேசி அழைப்புகளை மணமகள் வீட்டார் புறக்கணிக்க, அவர்கள் வீட்டுக்கே சென்று கலாட்டா செய்த சக்ஸேனா, பாஸ்வானையும் தாக்கியுள்ளார்.
ஆகவே, திருமணம் குறித்து பேசவேண்டும் என்று கூறி சக்ஸேனாவை Dwarkaவுக்கு அழைத்த பாஸ்வான், தன் நண்பர்களுடன் சேர்ந்து அவரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து ஓடிவந்துவிட்டதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |