பெண்ணின் மார்பகங்களில் முடி வளர்ச்சியா?
ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களின் மார்பகங்களை சுற்றி முடி வளரலாம், அடர்த்தியாக இல்லாமல் சற்று நீளமான கருமையான முடி வளர்ச்சியை பலரும் சந்தித்திருப்பார்கள்.
இது இயல்பான ஒன்று தான் என்றாலும், வேறு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.
மார்பக முடி வளர்ச்சியால் அச்சம் ஏன்?
அந்தரங்க பகுதியில் முடி வளர்ச்சி என்பது அசௌகரியமான சங்கடமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
30 சதவிகித பெண்கள் இதனை எதிர்கொண்டாலும் பலரும் வெளியே கூற அச்சப்படுகின்றனர்.
எதனால் இப்படி என்ற குழப்பமும் இல்லாமல் இல்லை, இது சாதாராணமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
காரணங்கள் என்னென்ன?
மார்பக காம்புகளை சுற்றி நீளமான கருமையான முடி இருந்தால் ஹார்மோன் மாற்றங்களால் இது ஏற்பட்டிருக்கலாம். பூப்பெய்தல், மாதவிடாய் தொடக்கம், மெனோபஸ் போன்ற காலகட்டங்களில் ஹார்மோனில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளால் முடி வளர்ச்சி இருக்கலாம்.
கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை சுற்று முடி வளர்ச்சி இருக்கலாம், மிக மெல்லியதாக தோன்றும் முடி வேகமாக வளர்ச்சி அடையும், இதற்கு காரணமும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களே, இது தற்காலிகமான ஒன்றே.
டனாசோல், அனபோலிக் ஸ்டெராய்டுகள், குளுக்கோகார்ட்டிகாய்டு, சைக்ளோஸ்போரின், மினாக்ஸிடில் மற்றும் பினைட்டோயின் போன்ற மருந்துகளின் பக்கவிளைவுகளும் முடி வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.
மனநலன் சார்ந்த பிரச்சனைகள், கருப்பை நீர்க்கட்டி, கருப்பையில் நிகழும் அசாதாரணமான மாற்றங்கள் காரணமாகவும் முடி வளர்ச்சி இருக்கும், முடி வளர்ச்சி இயல்பான ஒன்றாக இருந்தாலும் இதனுடன் இன்னும் பிற தொந்தரவுகள் இருக்கும்பட்சத்தில் மருத்துவரின் ஆலோசனை பெறுவதே சிறந்தது.