GST குறைவால்.., 90 கி.மீ மைலேஜ் தரும் பஜாஜ் பைக்கின் விலை குறைப்பு
ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு பிறகு 90 கி.மீ மைலேஜ் தரும் பஜாஜ் பைக்கின் விலை குறைந்துள்ளது.
விலை குறைப்பு
அதிக Mileage வழங்கும் Bajaj Platina பைக்கானது Bajaj Platina 100 மற்றும் Bajaj Platina 110 Drum ஆகிய 2 versionகளில் கிடைக்கிறது.
இதில், ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு பிறகு Bajaj Platina 100 பைக்கின் ஆரம்ப விலை 65,407 ரூபாயாகவும், Bajaj Platina 110 ட்ரம் பைக்கின் ஆரம்ப விலை 69,284 ரூபாயாகவும் உள்ளது.
இவை பஜாஜ் நிறுவனத்தின் Ex-showroom Price விலை ஆகும்.
இதற்கு முன்னதாக Bajaj Platina 100 பைக்கின் ஆரம்ப விலை 70,611 ரூபாய் ஆகவும், Bajaj Platina 110 ட்ரம் பைக்கின் விலை 74,771 ரூபாயாகவும் இருந்தது.
இந்த பஜாஜ் பிளாட்டினா பைக்கானது லிட்டருக்கு 70-90 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறுகின்றனர் அதன் உரிமையாளர்கள் .
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |