ரஷீத் கானின் மிரட்டல் பந்துவீச்சில் வீழ்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ்! இமாலய வெற்றி பெற்ற ஹர்திக் பாண்ட்யா படை
ஐபிஎல் 2023 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.
சுருண்ட ராஜஸ்தான் ராயல்ஸ்
ஜெய்ப்பூரில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 118 ஓட்டங்களுக்கு சுருண்டது. கேப்டன் சஞ்சு சாம்சன் 20 பந்துகளில் 30 ஓட்டங்களும், போல்ட் 15 ஓட்டங்களும் எடுத்தனர்.
Image: IPL (Twitter)
சுழற்பந்து வீச்சில் மிரட்டிய ரஷீத் கான் 3 விக்கெட்டுகளும், நூர் அகமது 2 விக்கெட்டுகளும், ஷமி, ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஜோ லிட்டில் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ⒻⒶⒸⓉ ⒻⒾⓁⒺ: @rashidkhan_19 didn't concede a single boundary today! ???
— Gujarat Titans (@gujarat_titans) May 5, 2023
Describe the spell in 1️⃣ word! #AavaDe #RRvGT | #TATAIPL 2023 pic.twitter.com/aokHHPtSxu
குஜராத் மிரட்டல் வெற்றி
அதன் பின்னர் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுப்மன் கில் 36 ஓட்டங்கள் எடுத்து சஹால் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
Gill looking in fine touch to anchor the run chase! ?#RRvGT #AavaDe #TATAIPL 2023 pic.twitter.com/VkmvqWnGiu
— Gujarat Titans (@gujarat_titans) May 5, 2023
அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 15 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்கள் விளாசினார். மறுமுனையில் நிதானமாக ஆடிய விருத்திமான் சஹா 34 பந்துகளில் 41 ஓட்டங்களும் எடுத்து 13.5 ஓவரிலேயே அணியை வெற்றி பெற வைத்தனர்.
?????????? ??????! @Wriddhipops completes ⑤⓪⓪ runs for us in #TATAIPL ?⚡#GT - 71/0 (9.3 overs)
— Gujarat Titans (@gujarat_titans) May 5, 2023
Wishes for Saha bhai, #AavaDe ?? #RRvGT pic.twitter.com/3bZkwsTcta
சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷீத் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
A ?????????? ??????? for the Titans! ⚡?#AavaDe | #RRvGT | #TATAIPL 2023 pic.twitter.com/B81TwT3D5j
— Gujarat Titans (@gujarat_titans) May 5, 2023