கொல்கத்தாவை வீழ்த்திய குஜராத்: 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Gujarat Titans Kolkata Knight Riders Shubman Gill IPL 2025
By Thiru Apr 21, 2025 07:29 PM GMT
Report

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டனஸ் அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

குஜராத் அபார வெற்றி

நடப்பு ஐபிஎல் சீசனின் 39-வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அசத்தியுள்ளது.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த பரபரப்பான ஆட்டத்தில், நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

கொல்கத்தாவை வீழ்த்திய குஜராத்: 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி! | Gt Beats Kkr By 39 Runs In Ipl Thriller

இதையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 114 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொல்கத்தா பந்துவீச்சாளர்களை திணறடித்தனர்.

அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் 36 பந்துகளில் 52 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது இன்னிங்ஸில் 6 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும்.

தொடர்ந்து களமிறங்கிய ஜாஸ் பட்லர், கேப்டன் கில்லுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

கொல்கத்தாவை வீழ்த்திய குஜராத்: 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி! | Gt Beats Kkr By 39 Runs In Ipl Thriller

அபாரமாக ஆடிய கில் 55 பந்துகளில் 90 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

பட்லர் 23 பந்துகளில் 41 ஓட்டங்கள் (8 பவுண்டரிகள்) விளாச, குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ஓட்டங்கள் குவித்தது.

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்!

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்!

சொதப்பிய கொல்கத்தா

199 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஒரு ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுனில் நரேன் 17 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் ரஹானே நிதானமாக ஆடி 36 பந்துகளில் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சி செய்தார்.

ஆனால், அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 14 ஓட்டங்களும், ரிங்கு சிங் 14 ஓட்டங்களும் அதிரடி வீரர் ரஸ்ஸல் 21 ஓட்டங்களும், ராமந்தீப் சிங் ஒரு ஓட்டமும் எடுத்து ஏமாற்றம் அளித்தனர்.

  இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US