சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்!
சவுதி அரேபியாவிலிருந்து ஆயிரக்கணக்கான பிச்சைக்காரர்கள் நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.
பாகிஸ்தான் கவலை
பாகிஸ்தானியர்கள் வெளிநாடுகளில் பிச்சை எடுக்கும் விவகாரம் கவலை அளிப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார்.
சியால்கோட்டில் உள்ள பாகிஸ்தான் ரெடிமேட் ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினரிடம் (PRGMEA) பேசிய அவர், சவுதி அரேபியா மட்டும் குறைந்தது 4,700 பாகிஸ்தானிய பிச்சைக்காரர்களை நாடு கடத்தியுள்ளதாகக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் சுமார் 2 கோடியே 20 லட்சம் பிச்சைக்காரர்கள் இருப்பதாகவும், அவர்கள் ஆண்டுதோறும் சுமார் 42 பில்லியன் ரூபாய் சம்பாதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கை அதிகரிப்பது சர்வதேச அளவில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடு கடத்தப்பட்டவர்களின் சரியான காலக்கெடுவை அமைச்சர் ஆசிப் குறிப்பிடவில்லை என்றாலும், கடந்த ஆண்டு நாடாளுமன்றக் குழுவுக்கு பெடரல் புலனாய்வு அமைப்பு (FIA) அளித்த தகவலின்படி, 2024 ஆம் ஆண்டுடன் முடிவடைந்த மூன்று ஆண்டுகளில் சவுதி அரேபியா 4,000 பிச்சைக்காரர்களை நாடு கடத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் பிச்சை எதிர்ப்புச் சட்டம்
சவுதி அரேபியாவின் கடுமையான பிச்சை எதிர்ப்புச் சட்டம் தனிநபர்கள் பிச்சை எடுப்பதையும், பிச்சை எடுக்கும் குழுக்களில் ஈடுபடுவதையும் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ், நிதி அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும். பிச்சை எடுக்கும் செயலில் ஈடுபட்ட வெளிநாட்டினர் தண்டனை முடிவடைந்தவுடன் நாடு கடத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |