CSK அணியில் இணையும் தமிழக வீரர் - விலகும் மற்றொரு வீரர்?
CSK அணியில் அஷ்வின் விலகியுள்ள நிலையில், மற்றொரு தமிழக வீரர் இணைவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
CSK
5 முறை கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2025 ஐபிஎல் தொடரில் முதல்முறையாக , புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்தது.
முக்கிய வீரர்கள் பலரும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாததே அணியின் தோல்விக்கு காரணமாக கருதப்படுகிறது.

2026 ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள சென்னை அணி, டிரேடிங் மற்றும் மினி ஏலம் மூலம் புதிய வீரர்களை அணியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகிறது.
ஐபிஎல் தொடர்களில் ஓய்வை அறிவித்துள்ள CSK வீரர் அஷ்வின், BBL தொடரில் சிட்னி தண்டர் அணியில் இணைந்துள்ளார்.
தற்போது அவரின் இடத்தை நிரப்ப, மற்றொரு தமிழக சுழற்பந்து வீச்சாளரை அணிக்குள் கொண்டு வர உள்ளது CSK.
தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடி வருகிறார். ஆனால் ரூ.3.2 கோடிக்கு வாங்கப்பட்ட அவரை, 2025 ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் மட்டுமே களமிறக்கியது. மொத்தமாக 11 ஓவர்கள் மட்டுமே வீசினார்.

அங்கு ஏற்கனவே ரஷீத் கான் மற்றும் ராகுல் திவாதியா போன்ற ஆல் ரவுண்டர்கள் அணியில் இருப்பதால், வாஷிங்டன் சுந்தருக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியில் வாய்ப்பு வழங்க முடியவில்லை.
சிக்ஸர்மழை பொழிந்த கேப்டன்! ஒன்பது வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் அவுட்..தனியாளாய் 135 ஓட்டங்கள் விளாசல்
இதனால், அவரை வாங்கிய ரூ.3.2 கோடிக்கே CSK அணிக்கு டிரேட் செய்ய குஜராத் டைட்டன்ஸ் அணி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம் குரான் விலகல்?
மற்றொரு CSK வீரரான சாம் குரான் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து, CSK பெயரை நீக்கியதன் மூலம், அவர் CSK அணியில் இருந்து வெளியேறுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |