சிக்ஸர்மழை பொழிந்த கேப்டன்! ஒன்பது வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் அவுட்..தனியாளாய் 135 ஓட்டங்கள் விளாசல்
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஹாரி புரூக் 135 ஓட்டங்கள் விளாசினார்.
ஹாரி புரூக்
பே ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. 
முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 35.2 ஓவர்களில் 223 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஜோ ரூட் (Joe Root), ஜோஸ் பட்லர் (Jos Buttler) உட்பட 9 வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டத்தில் ஆட்டமிழந்தனர்.
ஆனால் அணித்தலைவர் ஹாரி புரூக் (Harry Brook) ருத்ர தாண்டவம் ஆடினார். வாணவேடிக்கை காட்டிய அவர், 101 பந்துகளில் 135 ஓட்டங்கள் விளாசினார். இதில் 11 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கும்.
ஓவர்டன்
அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜேமி ஓவர்டன் (Jamie Overton) 54 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்கள் விளாசினார்.
ஃபௌக்ஸ் 4 விக்கெட்டுகளும், டுஃபி 3 விக்கெட்டுகளும், ஹென்றி 2 விக்கெட்டுகளும், சாண்ட்னர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |