வரலாறு படைத்த GTA VI - முதல் நாளிலேயே 3.79 பில்லியன் டொலருக்கு விற்று சாதனை
GTA VI Breaks Records With 3.79 Billion dollar Launch: GTA VI முதல் நாளிலேயே 3.79 பில்லியன் டொலருக்கு விற்று சாதனை படைத்துள்ளது.
GTA VI புதிய உலக சாதனை
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த Grand Theft Auto VI (GTA VI), வெளியான முதல் நாளிலேயே 3.79 பில்லியன் அமெரிக்க டொலர் சில்லறை விற்பனை வருவாயை ஈட்டி புதிய உலக சாதனையை படைத்துள்ளது.
இதன் மூலம், பொழுதுபோக்கு வரலாற்றிலேயே மிகப்பெரிய அறிமுகமாக GTA VI திகழ்கிறது என்று Rockstar Games அறிவித்துள்ளது.

சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்த புதிய GTA பதிப்பு, உலகளாவிய கேமிங் துறையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்துள்ள GTA VI, வெளியீட்டுக்கு முன்பே 32.5 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி மற்றொரு சாதனையையும் படைத்துள்ளது.
100-க்கு 99 மதிப்பெண்கள்
மேலும், உலகளாவிய விமர்சகர்களின் மதிப்பீடுகளை ஒருங்கிணைக்கும் Metacritic தளத்தில் GTA VI-க்கு 100-க்கு 99 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. இது விளையாட்டுக்குக் கிடைத்த மிக உயர்ந்த பாராட்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த வெற்றியைப் பற்றி கருத்து தெரிவித்த Sam Houser, Rockstar Games நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனர், "உலகம் முழுவதும் உள்ள வீரர்களின் வரவேற்பு எங்களை மிகவும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்" என்று கூறினார்.

இந்த புதிய விளையாட்டு, ரசிகர்களை மீண்டும் கற்பனை நகரமான Vice City-க்கு அழைத்து செல்கிறது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள Leonida என்ற கற்பனை மாநிலத்தில் கதை நகர்கிறது. இதில் முக்கிய கதாபாத்திரங்களான Jason மற்றும் Lucia சதித்திட்டங்கள் மற்றும் குற்றச்சம்பவங்களில் சிக்கிக்கொள்ளும் சாகசத்தை ரசிகர்கள் அனுபவிக்க முடியும்.
அமெரிக்காவில் GTA VI வெளியீட்டை முன்னிட்டு பலர் வேலைக்கு விடுமுறை எடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிலர் அலுவலகக் கூட்டங்களை கூட தவிர்த்து, பல மணி நேரங்கள் தொடர்ந்து விளையாட திட்டமிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
விலை
இந்தியாவில், GTA VI Standard Edition ரூ.5,999-க்கும், Ultimate Edition ரூ.7,499-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Ultimate Edition-ல் கூடுதல் வாகனங்கள், ஆயுதங்கள், ஆடைகள் உள்ளிட்ட பிரத்யேக அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |