தமிழர்கள் வசிக்கும் அழகிய தீவு குவாடலூப்
பரந்து விரிந்த அழகான பட்டாம்பூச்சியை போன்று இரண்டு பெரிய தீவுகளுடன் காட்சியளிக்கிறது குவாடலூப்.
கடற்கரைகள், காடு மலைகள் நிறைந்த என இயற்கையின் அழகை தொற்றிக்கொண்டு சுற்றுலா தளமாகும் குவாடலூப்.
Grande-Terre மற்றும் Mountainous Basse-Terre என்ற இரண்டு பெரிய தீவுகள் இதன் அழகை மெருகேற்றுகிறது.
வட அமெரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் இடையே நடுவில் கரீபியனில் இது அமைந்திருக்கிறது.
குவாடலூப்பை சுற்றி கியூபா, வெனிசுலா, டொமினிக் குடியரசு, பிரெஞ்ச் கயானா, விர்ஜின் தீவு, டொமினிகா, ஆண்டிகுவா மற்றும் பார்புடா உள்ளிட்ட தீவு மற்றும் நாடுகள் அமைந்துள்ளன.
Maison du Cacao
குவாடலூப்பில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் இது முக்கியமானது.
சொக்லேட் பிரியர்களுக்கு நிச்சயம் விருந்தளிக்கும், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 20 நிமிடங்களுக்கு சொக்லேட் தயாரிப்பது எப்படி என காட்டப்பட்டு சுவைக்காகவும் வழங்கப்படுமாம்.
கடற்கரையின் அழகையும் தாண்டி கொக்கோ, roasted beans, chocodoux என சொக்லேட் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும்.
Zoo de Guadeloupe
Basse-Terre மலைகளின் மிக உயரத்தில் மிருகக்காட்சி சாலை அமைந்துள்ளது.
காட்டு வழி பயணம் நிச்சயம் த்ரில் அனுபவத்தை கொடுக்கும், இங்கு toucans, anacondas, iguanas, tortoises, monkeys மற்றும் parrotsகளை காணலாம். நுழைவாயிலேயே ரக்கூன்களுக்கு உணவளிக்கலாம்,
Plage de la Caravelle
அழகிய வெள்ளை மணல் கடற்கரையுடன் உங்களை வரவேற்கிறது Plage de la Caravelle.
கடலின் நீல நிறம், வெள்ளை மணல், வானத்தின் ஒன்றிணைப்பு என உங்களை மெய்சிலிர்க்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.
கடல் அலைகளை ரசித்தபடியே அங்குள்ள காலநிலையை சுவைக்கலாம்.
Réserve Cousteau
Jacques Cousteau என்பரின் மூலம் சர்வதேச கவனத்தை பெற்றது Réserve Cousteau. இந்த தீவை சுற்றியுள்ள நீர், தற்போது நீருக்கடியில் பூங்காவாக பாதுகாக்கப்படுகிறது.
இங்குள்ள பெரும்பாலான தளங்கள் பவளப்பாறைகள் மற்றும் நீருக்கடியில் diveக்கு ஏற்ற இடமாகும். Malendure Beachல் இருந்து 10 முதல் 15 நிமிடங்களில் படகு பயணத்தின் மூலம் இங்கு வந்தடையலாம்.
Mémorial ACTe
2015ம் ஆண்டு, பிரான்ஸ் ஜனாதிபதியாக இருந்த பிரான்சுவா ஹாலண்டே மற்றும் 19 நாட்டுத் தலைவர்கள் குவாடலூப் தீவுகளின் நினைவுச் சின்னம் ACTe ஐத் திறந்து வைத்தனர்.
அடிமை வர்த்தகத்தின் நினைவகம் மற்றும் வரலாற்றிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கலாச்சார மையமாகும் இதுவாகும்.
அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு 150 ஆண்டுகளுக்கும் மேலாகியும், குவாடலூப் தீவுகளில் கொத்தடிமைகளின் சிரமங்கள் மற்றும் போராட்டங்கள் பற்றி இன்னும் சொல்லப்படவில்லை.
இந்த கலாச்சார நிறுவனம் அடிமைத்தனத்தின் போது பாதிக்கப்பட்டவர்களின் நினைவகத்தைப் பாதுகாக்க முயல்கிறது.
அதே போல் பின்விளைவுகளைப் பற்றிய உரையாடலை வளர்க்கவும், சகாப்தத்தின் வரலாற்றுப் பாதுகாப்பை உருவாக்கவும் தொடங்கப்பட்டது.
தமிழர்கள் வசிக்கும் தீவு
19ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் இருந்து சுமார் 40,000 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக தமிழர்கள் குவாடலூப் தீவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் மூலமாக இவர்கள் அழைத்து செல்லப்பட்டதாக தெரிகிறது.
அவர்களின் மூன்றாம் அல்லது நான்காம் தலைமுறையினர் இன்றளவும் குவாடலூப் தீவுகளில் வசித்து வருகின்றனர்.
தற்போதைய சூழலில் 35,000 தமிழர்கள் வசித்து வருவதாகவும், அவர்களின் ஒரு சிலருக்கே தமிழ் மொழி பேசத் தெரியும் என கூறப்படுகிறது.