கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்: பின்னணியில் ஒரு அதிர்ச்சி செய்தி
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் திருமணமான தனது மகளைக் காணவில்லை என பொலிசில் புகாரளித்தார் ஒரு பெண்ணின் தந்தை.
பின்னர், கிணறு ஒன்றில் அந்தப் பெண்ணின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்
குஜராத்திலுள்ள Nana Varmora என்னும் கிராமத்தில் வாழ்ந்துவரும் ரம்ஜு மாமன் என்பவர், தனது மகளான குல்சம் மாமனை (19) தனது உறவினரான மோஸின் மாமனுக்கு திருமணம் செய்துகொடுத்திருந்தார்.
ஆனால், மோஸினுக்கு ஐந்து ஆண்டுகளாக வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துவந்துள்ளது. அவர் அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மோஸினுக்கும் குல்சமுக்கும் அடிக்கடி சண்டை நடந்துவந்துள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை குல்சமைக் காணாததால் அவரது தந்தை உட்பட கிராம மக்கள் அவரைத் தேடியுள்ளனர்.

அப்போது, மோஸின் வேலை செய்யும் பண்ணை ஒன்றிலுள்ள கிணற்றில் குல்சமுடைய உடைகள் மிதப்பது தெரியவரவே, ஆட்கள் கிணற்றில் இறங்க, குல்சமுடைய உடல் கிணற்றுக்குள் கிடப்பது தெரியவந்தது.
குல்சமுடைய தந்தை அளித்த புகாரின்பேரில் பொலிசார் மோஸினை கைது செய்துள்ளார்கள்.
விசாரணையில், வெள்ளிக்கிழமை இரவு, தன் மனைவியான குல்சமுடைய கழுத்தை அறுத்துக் கொன்ற மோஸின், அவரது உடலை ஒரு சாக்கு மூட்டையில் அடைத்து, சைக்கிளில் வைத்து, தான் வேலை செய்யும் பண்ணையிலுள்ள கிணற்றின் வீசியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |