எலி வால் போல் முடி இருக்கா? அடர்த்தியான கூந்தலுக்கு இந்த ஒரு இலை போதும்
பெண்களின் தலைமுடி என்பது எப்பொழுதும் ஒரு தனி அழகுதான். ஆனால் பல பெண்களுக்கு முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும்.
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில், முடி உதிர்தல் பிரச்சனையை அடியோடு நிறுத்தி அடர்தியான கூந்தல் வளர்ச்சிக்கு கொய்யா இலையை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கொய்யா இலை- 1 கைப்பிடி
- முட்டை- 1
- கடுகு எண்ணெய்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்து வைத்துள்ள கொய்யா இலை சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
பின் அதில் முட்டை மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இந்த ஹேர்பேக்கை உச்சந்தலை முதல் முடி முழுவதும் தடவி பின் 30 நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இந்த பேக்கை வாரத்தில் ஒரு முறை என்று தொடர்ந்து 3 மாதங்கள் பயன்படுத்தி வந்தால் புதிதாக முடி வளர உதவியாக இருக்கும்.
அடர்த்தியாகவும் முடி கருமையாகவும் வளர இந்த கொய்யா ஹேர்பேக்கை பயன்படுத்துங்கள்.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |