முடி கொட்டுதா? அப்ப இத ட்ரை பண்ணுங்க
பொதுவாகவே பெண்களுக்கு முடி உதிர்தல் என்பது அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அது நேரடியாக உடலில் விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்றாலும், மனவுளைச்சலை ஏற்படுத்தும்.
முடி உதிர்தலுக்கு வெவ்வேறு காரணங்கள் உள்ளன. மரபியல், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், உச்சந்தலையில் பூஞ்சை நிலைகள், மன அழுத்தம், தன்னுடல் தாக்க நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் இருந்தால் முடிக்கொட்டுதல் அதிகரிக்கும்.
ஆகவே வீட்டில் வளர்க்கும் கொய்யா மரத்தில் உள்ள இலைகளைக்கொண்டு முடியை அடர்த்தியதாக வளரச்செய்யலாம்.
என்ன செய்ய வேண்டும்?
ஒரு கைப்பிடி கொய்யா இலைகளை 500 மில்லி தண்ணீரில் 20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
அந்த தண்ணீரை வடிகட்டி, உங்கள் தலைமுடியில் பயன்படுத்துவதற்கு முன்பு முடியை ஈரமாக்க வேண்டும்.
இந்த தண்ணீரை உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் சீரம் போல பயன்படுத்தலாம்.
மேலும் கொய்யா இலையை தலைக்கு பயன்படுத்தினால் முடிக்கு எவ்விதமான ஊட்டச்சத்துகள் கிடைக்கும் என தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை காணவும்.