சென்னையில் மருத்துவமனையிலேயே மருத்துவருக்கு கத்திக்குத்து! முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி..விசாரணைக்கு உத்தரவு
சென்னை கிண்டி மருத்துவமனையில் வடமாநில இளைஞர் ஒருவர், அங்கு பணிபுரியும் மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறையில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் பாலாஜி ஜெகன்நாதன்.
இவரை விக்னேஷ் என்ற இளைஞர் உட்பட 4 பேர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. தனது தாய்க்கு மருத்துவர் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் கூறியதாக தெரிகிறது.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜி அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்தனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இச்சம்பவ அதிர்ச்சியளிப்பதாக கூறியதுடன், விரிவான விசாரணை நடத்திட ஆணையிட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |