வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
வங்கக்கடலில் தற்போது இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை.
அது தற்போதைய நிலையில் கரையை நெருங்கி கடக்கும். பிறகு வலு குறையும் என்று தெரியவந்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறாவிட்டாலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து நல்ல மழை பொழிவு தரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழையும், ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்று சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |