பைபர்ஜாய் சூறாவளியின் பெயரை குழந்தைக்கு சூட்டிய குஜராத் பெண்
குஜராத்தில் பிறந்து ஒருமாதமே ஆன பெண் குழந்தைக்கு பைபர்ஜாய் என சூறாவளியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
குழந்தைக்கு சூறாவளியின் பெயர்
இயற்கைப் பேரிடர்களுக்கு வைக்கும் பெயர்களை புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு வைக்கும் வினோதமான பழக்கத்தைக் கடைப்பிடிக்கும் வகையில், இந்தியாவின் மேற்குக் கடற்கரையை நெருங்கும் சூறாவளியின் பெயரை, குஜராத் பெண் ஒருவர் தனது ஒரு மாத பெண் குழந்தைக்கு சூட்டியுள்ளார்.
அந்தக் குழந்தையின் பெயர் ‘பைபர்ஜாய்’ (Biparjoy).
NDTV
புயல் காரணமாக குஜராத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அவ்வாறு வெளியற்றப்பட்ட குழந்தையின் குடும்பம் தற்போது கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜகாவ் என்ற இடத்தில் தங்கும் விடுதியில் உள்ளது.
சூறாவளிகளின் பெயரியைக் கொண்ட குழந்தைகள்
சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு பிறந்த இந்த குழந்தை, இப்போது சூறாவளிகளின் பெயரியைக் கொண்ட குழந்தைகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
ஏற்கெனவே, கிழக்குக் கடற்கரையில் கடந்த டிட்லி (Titli), ஃபானி (Fani) மற்றும் குலாப் (Gulab) ஆகிய சூறாவளிகளின் பெயர்கள் குழந்தைகளுக்கு வைக்கப்பட்டுள்ளன.
NDTV
ஆனால், பைபர்ஜாய் எனும் பெயர் உண்மையில் பேரழிவைக் குறிப்பதாக கூறப்படுகிறது. இந்த பெயர் வங்காளதேசத்தால் வழங்கப்பட்டது மற்றும் உலக வானிலை அமைப்பு (WMO) நாடுகளால் 2020-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு வெப்பமண்டல சூறாவளி படுகையில் உள்ள புயல்களுக்கு பெயரிடுவதற்கான வழிகாட்டுதல்களை உலக வானிலை அமைப்பு வகுத்துள்ளது. WMO வலைத்தளத்தின்படி, வெப்பமண்டல சூறாவளிகள் ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் நீடிக்கும், அதாவது பல சூறாவளிகள் ஒன்றாக தாக்கலாம். வானிலை முன்னறிவிப்பாளர்கள் குழப்பத்தைத் தவிர்க்க ஒவ்வொரு வெப்பமண்டல சூறாவளிக்கும் ஒரு பெயரைக் கொடுக்கிறார்கள்.
இயற்கை பேரழிவுகளின் பெயர்
வினோதமான பெயர்களை சூட்டுவதில் ஆர்வமுள்ள இந்தியர்கள் இயற்கை பேரழிவுகளின் பெயர்களையம் விடுவதில்லை. கோவிட் தொற்றுநோய்களின் போது, உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு கொரோனா என்று பெயரிடப்பட்டது. ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் உள்ள மற்ற இரண்டு குழந்தைகளுக்கும் வைரஸின் பெயர் சூட்டப்பட்டது.
இன்னும் ஒரு படி மேலே சென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் திரிபுராவில் சிக்கித் தவித்து, கோவிட் பரவுவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகளுக்குப் பிறகு தங்கள் ஆண் குழந்தைக்கு "லாக்டவுன்" என்று பெயரிட முடிவு செய்தனர்.