மனைவியை சயனைடு கொடுத்து கொன்ற கணவன்! ஒரு மாதம் கழித்து வெளிவந்த உண்மை
இந்திய மாநிலம் குஜராத்தில், ஒரு மாதத்திற்கு முன்பு மருத்துவமனையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்த மனைவிக்கு, கணவன் சயனைடு கொடுத்து கொலை செய்துள்ளது தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
குஜராத்தின் அன்கலேஷ்வர் நகரில் காதல் கல்யாணம் செய்து கொண்ட 34 வயதான ஊர்மிளா வாசவா (Urmila Vasava) மற்றும் ஜிக்னேஷ் பட்டேல் தம்பதிகள் வசித்து வந்தனர்.
அவர்கள் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அந்த தம்பதிக்கு காதல் கல்யாண வாழ்க்கை கசந்து போனதால், அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்து கொண்டேயிருந்தது.
இந்த நிலையில் அந்த பெண் வாசவாவுக்கு கடந்த மாதம் திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. அதனால் அவரை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
.அப்போது அந்த பெண் சிகிச்சையில் இருக்கும்போது அந்த கணவர் அவரை கொலை செய்ய ஒரு திட்டம் தீட்டினார். அதன் படி அவர் வேலை பார்க்கும் கெமிக்கல் கம்பெனியிலிருந்து சயனைடு மாத்திரையினை எடுத்துவந்தார்.
பிறகு அந்த சயனைடை அவரின் மனைவிக்கு சிகிச்சை நடக்கும் ட்ரிப்ஸ் ஏற்றும் மருந்தில் கலந்து கொடுத்து விட்டார். அதனால் சயனைடு ஏற்றப்பட்ட அந்த பெண் இறந்து விட்டார்.
பின்னர் அந்த பெண் உடல் நல கோளாறால் இறந்து விட்டதாக வழக்கு முடிக்கப்பட்டது ஆனால் அவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரின் உடலில் சயனைடு இருப்பதை கண்டுபிடித்தனர்.
அதன் பிறகு அவரின் கனவரை பிடித்து பொலிஸார் விசாரித்த போது அவர் மனைவியை சயனைடால் கொன்ற உண்மையை ஒப்புக்கொண்டார் .பிறகு பொலிஸார் அவர் மீது கொலை வழக்கு பதிந்து கைது செய்தனர்