சரக்குக் கப்பலில் திடீர் தீ: இந்தியர் பலி
ஹோர்முஸ் ஜலசந்தி அருகே பயணிக்கும்போது, சரக்குக் கப்பல் ஒன்றில் திடீரென தீப்பற்றியதில், அதில் பயணித்துக்கொண்டிருந்த பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சரக்குக் கப்பலில் தீ
இம்மாதம், அதாவது, மே மாதம் 7ஆம் திகதி, துபாயிலிருந்து ஏமன் நோக்கிப் புறப்பட்ட Al Faize Noore Sulemani 1 என்னும் சரக்குக் கப்பல், 8ஆம் திகதி 1.00 மணியளவில் ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே பயணித்துக்கொண்டிருக்கும்போது, அக்கப்பலில் திடீரென தீப்பற்றியுள்ளது.

கப்பலில் 18 இந்திய பணியாளர்கள் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், குஜராத்தைச் சேர்ந்த அல்தாஃப் (s Altaf Talab Ker) என்னும் பொறியாளர் தீயில் சிக்கி பலியாகியுள்ளார்.
மேலும் நான்கு பணியாளர்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவ்வழியாக வந்த கப்பல் ஒன்று தீப்பற்றிய கப்பலிலிருந்தவர்களை மீட்டுள்ளது.
இந்த துயர சம்பவம் குறித்து துபாயிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், துரதிர்ஷ்டவசமாக இந்தியர் ஒருவர் பலியாகிவிட்டதாகவும், காயமடைந்தவர்கள் துபாயிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், அவர்கள் பத்திரமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |