இந்தியாவில் வீதிக்கு ஒரு கோடீஸ்வரரைக் கொண்ட நகரம்! எங்குள்ளது தெரியுமா?
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு நகரில் கோடீஸ்வரர்கள் நிரம்பியுள்ளனர்.
மார்பி நகரம்
செராமிக் பொருட்களை 80 சதவீதம் இந்தியாவிற்கு அளிப்பது குஜராத் மாநிலத்தின் சிறிய நகரமான மார்பி.
1930களில் இங்கு செராமிக், டைல்ஸ் உற்பத்தி ஆலைகள் தொடங்கப்பட்டன. இங்குள்ள குடும்பங்களில் சுமார் 90 சதவீத குடும்பம் டைல்ஸ் மற்றும் செராமிக் உற்பத்தியில்தான் ஈடுபட்டுள்ளன.
இந்த தொழில் மூலமாக இவர்கள் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளனர். குறிப்பாக, சீனாவுடன் போட்டியிடும் அளவிற்கு சர்வதேச அளவில் செராமிக் மற்றும் டைல்ஸை விற்பனை செய்கிறார்கள்.
இந்தியாவின் செராமிக் நகரம்
இந்நகரில் 900 செராமிக் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதன் காரணமாக இந்நகரை "இந்தியாவின் செராமிக் நகரம்" என்று அழைக்கிறார்கள்.
இங்குள்ள பலரும் கோடிக்கணக்கிலான சொத்துகளுக்கு உரிமையாளர்களாக இருக்கின்றனர். எனினும், அவர்கள் அவற்றை பெரிதளவில் வெளியில் காட்டிக் கொள்வதில்லை.
மேலும், இங்கே இருக்கும் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கிட்டத்தட்ட 4 லட்சம் பேருக்கு இவர்கள் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |