குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம்!
ராஜஸ்தானை 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
அசத்திய சாய் சுதர்சன்
நடப்பு ஐபிஎல் சீசனின் 23-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்கள் குவித்தது.
குஜராத் அணியின் பேட்டிங்கில் சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி 82 ஓட்டங்கள் எடுத்தார்.
Wins column says 4, the work says more. pic.twitter.com/Nz67qWia47
— Shubman Gill (@ShubmanGill) April 9, 2025
அவருக்கு உறுதுணையாக பட்லர் மற்றும் ஷாருக் கான் ஆகியோர் தலா 36 ஓட்டங்களும், ராகுல் திவாடியா 24 ஓட்டங்களும் சேர்த்தனர்.
குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி
218 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.
அந்த அணியின் ஹெட்மயர் மட்டும் சிறப்பாக விளையாடி 52 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் கேப்டன் சஞ்சு சாம்சன் 41 ஓட்டங்களும், ரியான் பராக் 26 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 159 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
குஜராத் அணி பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், ரஷீத் கான் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |