அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா பதிலடி! பரஸ்பர வரி உயர்வால் உலகப் பொருளாதாரத்தில் அதிர்ச்சி
அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீனப் பொருட்களுக்கான வரியை அதிரடியாக 104% ஆக உயர்த்தியுள்ளார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அமெரிக்க பொருட்களுக்கான வரியை 84% ஆக உயர்த்தி அறிவித்துள்ளது சர்வதேச வணிக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டாம் திகதி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி பட்டியலை வெளியிட்டார்.
அதில் சீனப் பொருட்களுக்கான வரி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய சீனா, அமெரிக்காவின் அனைத்துப் பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என்று அறிவித்தது.
இந்த நிலையில், நேற்று சீனப் பொருட்களுக்கான வரியை அமெரிக்கா யாரும் எதிர்பாராத வகையில் 104% ஆக உயர்த்தியது.
இதற்கு பதிலடியாக, சீன நிதியமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து அமெரிக்க பொருட்களுக்கான வரியும் நாளை (ஏப்ரல் 10) முதல் 84% ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்த பரஸ்பர வரி உயர்வு நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போரை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |