முதல் அணியாக பிளே ஆஃப் சென்ற குஜராத் டைட்டன்ஸ்! ஐதராபாத்திற்கு எதிராக விக்கெட்டுகளை அள்ளிய இருவர்
அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.
கில் அதிரடி சதம்
நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 188 ஓட்டங்கள் குவித்தது.
சுப்மன் கில் 58 பந்துகளில் 101 ஓட்டங்களும், சாய் சுதர்சன் 36 பந்துகளில் 47 ஓட்டங்களும் எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர்குமார் 5 விக்கெட்டுகளையும், மார்கோ ஜென்சென், பரூக்கி மற்றும் நடராஜன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
@ShubmanGill (Twitter)
போராடி அரைசதம் அடித்த கிளாசென்
பின்னர் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை அணியின் விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே முகமது ஷமி கைப்பற்றினார். அதன் பின்னர் மோஹித் சர்மா மறுமுனையில் தாக்குதல் தொடுத்தார்.
இதனால் ஐதராபாத் அணி நிலைகுலைந்தது. எனினும் தனியாளாக போராடிய ஹெய்ன்ரிச் கிளாசென் 44 பந்துகளில் 64 ஓட்டங்கள் விளாசினார். இதில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும்.
Heinie is still going ?? pic.twitter.com/YFOBa8b753
— SunRisers Hyderabad (@SunRisers) May 15, 2023
பிளே ஆஃப்பிற்குள் நுழைந்த குஜராத்
புவனேஷ்வர்குமார் 27 ஓட்டங்களும், மார்க்கண்டே 9 பந்தில் 18 ஓட்டங்களும் எடுத்தனர். ஐதராபாத் அணி 9 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.
????????... ???? ?? ????! ???#GTvSRH #AavaDe #TATAIPL 2023 pic.twitter.com/0lroDonlxm
— Gujarat Titans (@gujarat_titans) May 15, 2023
முகமது ஷமி மற்றும் மோஹித் சர்மா தலா 4 விக்கெட்டுகளும், யாஷ் தயாள் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். கில் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
@ShubmanGill (Twitter)
@ShubmanGill (Twitter)