56 பந்தில் முதல் சதத்தை அடித்த சுப்மன் கில்..5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டிய பந்துவீச்சாளர்

Sivaraj
in கிரிக்கெட்Report this article
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் தனது முதல் ஐபிஎல் சதத்தினை பதிவு செய்தார்.
கில் முதல் சதம்
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்கள் குவித்தது.
தொடக்க வீரர் சுப்மன் கில் பவுண்டரிகளை தெறிக்க விட்டார். அவர் 56 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தினை அடித்தார். மொத்தம் 58 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் விளாசினார்.
BCCI
புவனேஷ்வர்குமார் 5 விக்கெட்டுகள்
சாய் சுதர்சன் 36 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்கள் எடுத்தார். சன்ரைசர் ஐதராபாத் அணியின் தரப்பில் மிரட்டலாக பந்துவீசிய புவனேஷ்வர்குமார் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 81 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வருகிறது.
@IPL (Twitter)