சுரங்க தொழிலாளர்கள் மீது மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு! 20 பேர் பலியான கொடூரம்
பாகிஸ்தானில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 20 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
துப்பாக்கி ஏந்திய நபர்கள்
பாகிஸ்தான் மாகாணமான பலுசிஸ்தான் கனிம வளங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு செயல்பட்டு வரும் தனியார் சுரங்கத்திற்கு அதிகாலை வேளையில் வந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதில் சுரங்க தொழிலாளர்கள் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.
கிளர்ச்சிக் குழு
இதுகுறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் பலுசிஸ்தான் கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிக்குழு அப்பகுதியில் பொதுமக்கள், பொலிஸார் உட்பட பல்வேறு தரப்பினரை குறிவைத்து அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |