3 வயது பெண் குழந்தையின் பையில் கைத்துப்பாக்கி: அதிர்ச்சியடைந்த அமெரிக்க மழலையர் பள்ளி
அமெரிக்காவில் உள்ள மழலையர் பள்ளியில் 3 வயது பெண் குழந்தையின் பையில் துப்பாக்கி இருப்பதை பார்த்து ஆசிரியர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
3 வயது குழந்தையின் பையில் துப்பாக்கி
அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை மழலையர் பள்ளி ஒன்றில் 3 வயது பெண் குழந்தையின் பையில் கைத்துப்பாக்கி ஒன்று இருப்பதை பார்த்து பள்ளி நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்காவின் சான் அண்டோனியோ உள்ள Pre-K 4 SA மையத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கைத்துப்பாக்கி தன்னுடைய பையில் இருப்பதை சம்பந்தப்பட்ட குழந்தை அறிந்து இருக்கவில்லை என்றும், பள்ளி ஆசிரியர் உடனடியாக துப்பாக்கியை பறிமுதல் செய்து பொலிஸாருக்கு தகவல் அளித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் செவ்வாய்க்கிழமை மதியம் குழந்தையின் பெற்றோருக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட தந்தை
இந்நிலையில் சம்பந்தப்பட்ட குழந்தையின் 35 வயதுடைய தந்தை பீட் ரோபிள்ஸ், குழந்தைக்கு ஆபத்து விளைவித்த குற்றத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இதில் சம்பந்தப்பட்ட 3 வயது பெண் குழந்தை குழந்தைகள் பாதுகாப்பு சேவையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பொலிஸார் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, அத்துடன் இதில் சம்பந்தப்பட்ட வேறு சிலரும் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |