அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்..புதிய சட்ட திருத்தம்!
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, நியூயார்க்கில் துப்பாக்கி தொடர்பில் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் கடந்த மாதம் பல்பொருள் அங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியாகினர். அதேபோல் சமீபத்தில் டெக்சாஸ் மாகாண உள்ள பள்ளியில், நடந்த துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஜோ பைடன் கைத்துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை 18யில் இருந்து 21 ஆக உயர்த்த சட்டம் இயற்றுபவர்களுக்கு கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில், தற்போது நியூயார்க் மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் துப்பாக்கி சீர்திருத்த சட்டங்களின் தொகுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, பல்பொருள் அங்காடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டினை கருத்தில் கொண்டு, துப்பாக்கி வாங்குவதற்கான வயதை வரம்பு 18ல் இருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Photo Credit: AFP
மேலும், இந்த சட்ட திருத்தத்தில் பொதுமக்கள் கவச உடை போன்றவற்றை வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின் கடுமையான துப்பாக்கி சட்டங்கள் உள்ள மாகாணங்களில் நியூயார்க் ஒன்றாகும்.
துப்பாக்கி வன்முறை ஆவணத்தின்படி, 2022ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 18,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கிட்டத்தட்ட 10,300 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Photo Credit: Reuters