மெக்சிகோ கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் உயிரிழப்பு
மெக்சிகோவின் கால்பந்து மைதானத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
ஞாயிற்றுக்கிழமை மெக்சிகோவின் மத்திய பகுதியில் குவானாஜுவாடோ(Guanajuato) மாகாணத்தில் உள்ள உள்ளூர் கால்பந்து மைதானத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சலமன்கா நகரில் நடைபெற்ற கால்பந்து போட்டி முடிவுக்கு பிறகு இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்த கும்பல்கள் திடீரென மைதானத்திற்குள் நுழைந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதாக அப்பகுதி மாகாண மேயர் சீசர் பிரிட்டோ குறிப்பிட்டுள்ளார்.
10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், பின்னர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நபர் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் எதற்காக நடைபெற்றது? தாக்குதலில் யார் ஈடுபட்டார்கள்? என்பது போன்ற தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குவானாஜுவாடோ பகுதியில் சமீபத்தில் பிராந்திய ஸ்திரமின்மை அதிகரித்து வருவதால் இது போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |