அமெரிக்காவில் நடந்த திடீர் துப்பாக்கிச்சூடு: 3 பேர் வரை உயிரிழப்பு ஒருவர் காயம்
Gun Shooting at Parma Event Venue 3 dead: அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம் பார்மா(Parma) நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடந்த திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் உள்ளூர் காவல் துறையினர் தெரிவித்த தகவலில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மேலும் ஒருவர் காலில் காயமடைந்து இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
5331 ரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள பண்டோராஸ் மேஜிக்கல் ஈவென்ட்ஸ் என்ற அரங்கிற்குள் ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் இரண்டு பேர் நுழைந்ததாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இந்த தாக்குதலில் மூன்று பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும், ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் பொதுமக்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.