தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு: 27 பேர் உயிரிழப்பு
Gun Shooting In South Africa Back to Back 27 Killed :தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற்ற அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 27 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
ஜோகன்னஸ்பர்க் நகரில் துப்பாக்கிச்சூடு
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் அமைந்துள்ள பார் ஒன்றில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.
வாடிக்கையாளர்கள் அதிக அளவு கூடியிருந்த நேரத்தில் பாருக்குள் நுழைந்த 8 மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் 13 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.

மர்ம நபர்கள் சம்பவ இடத்தில் இருந்து செல்வதற்கு முன்னதாக வாடிக்கையாளர் சிலரின் பைகளில் இருந்து செல்போன்களை எடுத்து விட்டு சென்றதோடு, வெளியே நின்ற 2 கார்களையும் தீயிட்டு கொளுத்தினர்.
இந்த சம்பவம் கும்பல் மோதலாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
அதே சமயம் இந்த தாக்குதலுக்கான காரணம் உறுதியாக கண்டறியப்படவில்லை. தனிப்படை பொலிஸார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு துப்பாக்கிச் சூடு
அதே சமயம் இன்று காலை தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் புறநகர் பகுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதலை நடத்தினர்.
இந்த சம்பவத்தில் 10 பேர் வரை கொல்லப்பட்டனர், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.