டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம்
வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல்தாரி கைது
அமெரிக்காவின் வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகையில் இரவு விருந்து நிகழ்ச்சியில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
செய்தியாளர்களுக்கான இரவு விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலினா டிரம்ப் மற்றும் பல்வேறு அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Security incident reported during White House Correspondents’ Dinner at the Washington Hilton on April 25, 2026
— Geno Insights | Analysis (@GenoInsightsKe) April 26, 2026
What we know
Shots were reported near the main security screening area just outside the ballroom
The incident occurred shortly after Donald Trump and Melania Trump… pic.twitter.com/zLdSarp5sS
அரங்கிற்குள் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டவுடன் பாதுகாப்பு அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு தாக்குதாரியை அங்கேயே மடக்கி பிடித்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் 31 வயது கலிபோர்னியா ஆசிரியர் கோல் ஆலன் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.

திட்டமிட்டபடி நடந்த விருந்து
துப்பாக்கிச் சூடு அசம்பாவிதத்தை தொடர்ந்து, விருந்து நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறும் என்று வெள்ளை மாளிகையின் செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் வெய்ஜியா ஜியாங் அறிவித்தார்.
Good audio… pic.twitter.com/8BTXZ96eLy
— David Bozell 🇺🇸 (@DavidBozell) April 26, 2026
விருந்து தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக ஜனாதிபதி டிரம்ப் மற்றும் பிற முக்கிய அமைச்சர்கள் இந்த விருந்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் ஹோட்டல் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |