வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச்சூடு: உயிர் பிழைத்தார் டிரம்ப்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச் சூடு தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை பாதுகாப்பாக வெளியேற்றி அழைத்து சென்றனர்.
🚨 BREAKING UPDATE: President Trump has been SAFELY EVACUATED from the White House Correspondents Dinner, per sources
— Nick Sortor (@nicksortor) April 26, 2026
You can hear shots ring out in this video
A shooter opened fire in the LOBBY -- the shooter is DEAD
This is absolutely INSANE
LEFTIST VIOLENCE MUST END! pic.twitter.com/GB1eUXN8kx
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் ஆகியோர் கலந்து கொண்ட செய்தியாளர்களுக்கான இரவு விருந்து நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் புகுந்து இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் தாக்குதல்தாரி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் எந்தவொரு அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |