வெள்ளை மாளிகை அருகே காவல் படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு: டிரம்ப் வெளியிட்ட பகீர் தகவல்
வெள்ளை மாளிகை அருகே தேசிய காவல் படை வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை மாளிகை அருகில் துப்பாக்கி சூடு
வாஷிங்டன் டி.சி யில் அமைந்துள்ள வெள்ளை மாளிகையில் இருந்து இரண்டு தெருக்கள் மட்டுமே தொலைவில் 2 தேசிய காவல் படை வீரர்கள் மீது துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குண்டு காயங்களுடன் தேசிய காவல் படை வீரர்கள் உயிருக்கு போராடி வருகின்றனர்.
துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து, இந்த சம்பவத்தை இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் என்று நகர மேயர் அறிவித்தார்.
பொலிஸார் வழங்கிய தகவலில், மேற்கு வர்ஜீனியாவை சேர்ந்த 2 தேசிய காவல் படை வீரர்கள் மீது புதன்கிழமை பிற்பகலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதை அடுத்து, அருகில் இருந்த மற்ற தேசிய காவல் படை வீரர்கள் விரைந்து செயல்பட்டு தாக்குதல்தாரியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

டிரம்ப் கூறிய தகவல்
இந்த சம்பவத்தின் போது புளோரிடாவில் இருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தாக்குதல்தாரி ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்றும், அவர் 2021ம் ஆண்டு சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர் என்றும் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை வெளியிட்ட தகவலில், கைது செய்யப்பட்டுள்ள தாக்குதல்தாரி ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஹ்மானுல்லா லகாமால் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |