வணிக வளாகத்தில் நடந்த திடீர் துப்பாக்கிச் சூடு! அலறியடித்து ஓடிய மக்கள்..ஒருவர் பலி
அமெரிக்காவில் மால் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திடீர் துப்பாக்கிச்சூடு
டெக்சாஸில் உள்ள சியோலோ விஸ்டா மாலில் நேற்று மாலை திடீர் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதனால் மக்கள் பயத்தில் அலறி ஓடினர்.
குண்டு பாய்ந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.
அந்த நபர் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கவலைக்கிடம்
இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த ஆண்டு இதுவரை அமெரிக்கா முழுவதும் 70க்கும் மேற்பட்ட பாரிய துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக துப்பாக்கி வன்முறைக் காப்பகம் கூறியுள்ளது.