போரில் துப்பாக்கி ஏந்திய ரோபோ நாய்கள்: சீனாவின் பயிற்சியால் எழுந்துள்ள அச்சம்
முதுகில் இயந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட ரோபோ நாய்களுடன் சீனா போர்ப்பயிற்சி மேற்கொண்டுவரும் நிலையில், ரோபோ நாய்களால் தார்மீகப் பிரச்சினைகள் எழலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.
Credit: AFP
துப்பாக்கி ஏந்திய ரோபோ நாய்கள்
சீனா, கம்போடிய படைகளுடன் தனது படைகளும் இணைந்து மேற்கொள்ளும், 15 நாட்கள் நடைபெறும் போர்ப்பயிற்சிக்கு, Golden Dragon என்று பெயரிட்டுள்ளது. இந்தப் பயிற்சியில், முதுகில் இயந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட ரோபோ நாய்களும் பங்கேற்கின்றன.
Credit: AFP
நிபுணர்கள் எச்சரிக்கை
ஆனால், இந்த ஆயுதம் தாங்கிய ரோபோ நாய்களால் தார்மீகப் பிரச்சினைகள் எழலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். ஆகவே, ஒருபக்கம் இந்த ரோபோ நாய்களை போரில் பயன்படுத்துவதற்கு சர்வதேச அளவில் தடை செய்யவேண்டும் என கோரிக்கைகள் எழுந்துவருகின்றன.
Credit: Getty
ஆனால், இந்த ரோபோ நாய்களால், மனித உயிர்கள் இழப்பு தவிர்க்கப்படலாம் என ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
Credit: AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |