அமெரிக்க பல்கலைக்கழகத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு! சாப்பாடு பரிமாறும்போது ஏற்பட்ட தகராறில் விபரீதம்
அமெரிக்காவின் மோர்கன் பல்கலைக்கழக விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருதரப்பு மாணவர்களிடையே மோதல்
மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் மோர்கன். இதன் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி படிக்கும் விடுதி மாணவர்களுக்கான சாப்பாடு பரிமாறும்போது, இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
Anna Moneymaker/Getty Images
அப்போது ஏற்பட்ட தகராறில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளார்.
மாணவர்கள் பலரும் அலறி ஓடிய நிலையில் 5 பேர் காயமடைந்தனர்.
பரபரப்பு சம்பவம்
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக பல்கலைக்கழக வளாகத்திற்கு விரைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் மேரிலாண்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
AP Photo/Julia Nikhinson
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |