இலங்கைக்கு எதிரான போட்டியில் அறிமுகமான மதுரை வீராங்கனை! சூப்பர் ஸ்டார் என்று வரவேற்ற கேப்டன்
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியில், மதுரையைச் சேர்ந்த வீராங்கனை கமலினி அறிமுகமானார்.
குணாளன் கமலினி
இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது.
𝗗𝗲𝗯𝘂𝘁 𝗗𝗶𝗮𝗿𝗶𝗲𝘀, 𝗳𝘁. 𝗚. 𝗞𝗮𝗺𝗮𝗹𝗶𝗻𝗶 ✨
— BCCI Women (@BCCIWomen) December 30, 2025
🎥 A special moment as Captain Harmanpreet Kaur hands over the #TeamIndia cap and shares her words of encouragement with the 17-year-old debutant 🧢#INDvSL | @ImHarmanpreet | @IDFCFIRSTBank pic.twitter.com/FdBMnfP8cX
இதில் இந்திய அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இப்போட்டியில் ஸ்ம்ரிதி மந்தனாவிற்கு பதிலாக குணாளன் கமலினி (Gunalan Kamalini) தொடக்க வீராங்கனையாக களமிறங்கினார்.
முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி
மொத்தம் 12 பந்துகளை எதிர்கொண்ட கமலினி, 2 பவுண்டரிகளுடன் 12 ஓட்டங்கள் எடுத்தார்.
மதுரையைச் சேர்ந்த 17 வயதான கமலினிக்கு இது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆகும்.
போட்டிக்கு முன்பாக "U-19 சூப்பர் ஸ்டார்" கமலினியை அணிக்கு வரவேற்போம் என்று கூறி அணிதலைவைர் ஹர்மன்ப்ரீத் கவுர் தொப்பி அவரிடம் வழங்கினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |