ஆஸ்கர் போட்டியில் ஒரு இந்தியச் சிறுமி: யார் இந்த Sajda Pathan?
ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் பல, ஆஸ்கர் போட்டியில் இல்லை.
மாறாக, பெரிதும் எதிர்பார்க்கப்படாத, இந்தியச் சிறுமி ஒருவர் நடித்துள்ள ஒரு திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் உள்ளது.
ஆஸ்கர் போட்டியில் அனுஜா
ஆஸ்கர் போட்டியில், Best live action short என்னும் பிரிவில் ’அனுஜா’ என்னும் திரைப்படம் போட்டியிடுகிறது.
ஆடை தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் தன் அக்காவுடன் வேலை செய்யும் அனுஜா என்ற ஒரு ஒன்பது வயது சிறுமி, தன் எதிர்காலத்தையும், குடும்பத்தின் எதிர்காலத்தையும் மாற்றக்கூடிய, வேலையா அல்லது கல்வியா என்பது தொடர்பில் எடுக்கும் முடிவு குறித்த திரைப்படம் அனுஜா.
அனுஜாவாக நடித்திருக்கும் சிறுமியின் நிஜக்கதையும் கிட்டத்தட்ட அந்த கதாபாத்திரத்தின் கதைதான் எனலாம்.
ஆம், ஒன்பது வயதாகும் Sajda Pathan என்னும் அந்தச் சிறுமி, இந்தியாவின் டெல்லியில் குழந்தைத் தொழிலாளியாக இருந்தவள். சஜ்தாவை தொண்டு நிறுவனம் ஒன்று மீட்டது.
சத்ஜாவின் நடிப்புத் திறமையைக் குறித்து அறிந்த Laetitia Colombani என்னும் பிரெஞ்சு இயக்குநர் சத்ஜாவை The Braid (La Tresse) என்னும் திரைப்படத்தில் நடிக்கவைத்தார்.
Short on time, big on talent, here are this year's nominees for Live Action Short Film. #Oscars pic.twitter.com/Wx0TZIpUen
— The Academy (@TheAcademy) January 23, 2025
சத்ஜாவோ, தனது இரண்டாவது படத்திலேயே ஆஸ்கர் போட்டிக்குச் சென்றுவிட்டாள்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |