சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சண்டை: பாதுகாப்பு படையினர் 22 பேர் வீரமரணம்
இந்திய மாநிலம் சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடனான துப்பாக்கி சண்டையில் 22 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தனர்.
சத்தீஸ்கரின் தலைநகரான ராய்ப்பூரிலிருந்து 400 கி.மீ தூரத்தில் பிஜாப்பூர் மாவட்டத்தில் Sukma-Bijapur எல்லை பகுதியில் நேற்று இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் கடுமையான தாக்குதல் நடைபெற்றது
இரு தரப்புக்கும் இடையில் கடுமையான மோதலில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 21 இன்னும் காணவில்லை என்றும், 20-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பிஜாப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
On ground visuals from the site of Naxal attack at Sukma-Bijapur border in Chhattisgarh; 22 security personnel have lost their lives in the attack. (ANI)#Chhattisgarh #Bijapur #NaxalAttack #Sukma pic.twitter.com/8lVifHKnmB
— Thestrate news (@Thestratenews) April 4, 2021
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் கடந்த 10 நாட்களாக, 2013 Jhiram Ghati கொலைகள் உள்ளிட்ட பெரிய தாக்குதல்களுடன் தொடர்புடைய தடைசெய்யப்பட்ட CPI (மாவோயிஸ்ட்) உயர் தலைமையில் இருக்கும் Madvi Hidma பதுங்கியிருக்கும் இடத்தைப் பற்றிய தகவல்களை சேகரித்துவந்தனர்.
இந்த நிலையில், சனிக்கிழமையன்று சத்தீஸ்கரின் நரியான்பூர் மாவட்டத்தில் 27 D.R.G. (மாவட்ட ரிசர்வ் காவலர்) துருப்புக்களை ஏற்றிச் சென்ற பேருந்தை மாவோயிஸ்டுகள் குறிவைத்து தாக்குதல் நடத்தினர், இதில் 5 பாதுகாப்பது படையினர் கொல்லப்பட்டனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர்.
#NaxalTerrorism
— Charmee Patel (@Me_Charmee) April 4, 2021
22 security personnel have lost their lives in the #NaxalAttack at #Sukma-#Bijapur in #Chhattisgarh !!#CRPF pic.twitter.com/UGethIXkBP
அதனைத் தொடர்து CRPF மற்றும் DRG படையினர் இணைந்து பதில் தாக்குதல் நடத்தினர். எதிர்கால தரப்பில் 15 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.