தென் ஆப்பிரிக்காவில் மதுபான விடுதியில் மர்ம கும்பல் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி
தென் ஆப்பிரிக்காவில் உள்ள மதுபான விடுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 9 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரின் மேற்கே அமைந்துள்ள பெக்கர் ஸ்டால் பகுதி மதுபான விடுதியில் மர்ம நபர்கள் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இரண்டு வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் மதுபான விடுதியில் இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பலர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோட முண்டியடித்தனர், இருப்பினும் பலர் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் ரத்த வெள்ளத்தில் மடிந்து விழுந்தனர்.
மொத்தம் 9 பேர் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளனர், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
தப்பியோடிய மர்ம நபர்கள்

தாக்குதலில் ஈடுபட்ட மர்ம குழுவை சேர்ந்தவர்கள் தப்பிச் சென்ற போது சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம கும்பலில் மொத்தம் 12 பேர் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இந்த மதுபான விடுதி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |