மழலையர் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையை சுட்ட நபர்
A gunman shot and killed a kindergarten teacher in Thailand: தாய்லாந்து நாட்டில், மழலையர் பள்ளி ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர், ஆசிரியை ஒருவரை சுட்டுக்கொன்ற விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
புதன்கிழமையன்று, தாய்லாந்திலுள்ள Chonburi என்னுமிடத்தில் அமைந்துள்ள மழலையர் பள்ளி ஒன்றிற்குள் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார்.
பரபரப்பை உருவாக்கியுள்ள சம்பவம்
வகுப்பொன்றில் குழந்தைகள் அமர்ந்திருக்க, அந்த நபர் அந்த வகுப்பாசிரியையை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

அந்த ஆசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, துப்பாக்கியால் சுட்ட நபர் தப்பியோடியுள்ளார்.
விசாரணையில், அவர் அந்த ஆசிரியையின் கணவர் என தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளியிலிருந்த பிள்ளைகள் அனைவரும், மற்ற ஆசிரியர்களும் பாதுகாப்பாக பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார்கள்.
என்றாலும், அந்த பயங்கரக் காட்சியைக் கண்ட பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சியிலிருந்து அவர்கள் விடுபடுவதற்காக, மன நல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
பட்டப்பகலில் ஒருவர் மழலையர் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியை ஒருவரை சுட்டுகொன்ற விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |