துருக்கியில் 8 பேரை சுட்டுக் கொன்ற மர்ம நபர்: சிசிடிவியில் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்
Gunman kills 8 people in turkey: துருக்கியில் 8 பேரை சுட்டுக் கொன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
துருக்கியில் துப்பாக்கிச் சூடு
மேற்கு துருக்கியின் அஃப்யோன்கராஹிசார்(Afyonkarahisar) மாகாணத்தில் வியாழக்கிழமை மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 8 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அஃப்யோன்கராஹிசார் மாகாணத்தின் கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.
அயாசினி கிராமத்திற்கு அருகே காரில் பயணித்த 3 பேர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கியர் கிராமத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மேலும் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
யுகாரிடான்டிர் பகுதியில் நடந்த தாக்குதலில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்./// மேலும் ஒருவர் நபர் இந்த தாக்குதலில் படுகாயமடைந்து தீவிர நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தேடுதல் வேட்டை மற்றும் கைது
இந்நிலையில் சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த அதிகாரிகள், கண்ணாடி, கருப்பு நிற ஜாக்கெட் மற்றும் வெள்ளை நிற பேண்ட் அணிந்த நபர் துப்பாக்கியுடன் வலம் வந்தது கண்டுபிடித்தனர்.
மேலும் அந்த நபர் தாக்குதல் நடத்தி விட்டு சிறப்பு நிற கார் ஒன்றில் தப்பிச் செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், அருகாமையில் உள்ள எஸ்கிஷெஹிர்(Eskişehir) மாகாணத்தில் வைத்து தாக்குதல்தாரியை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.