பட்டப்பகலில் நடந்த கொடூரம்... துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான பலர்: டசின் கணக்கானோர் நிலை
பப்புவா நியூ கினியாவில் பேருந்து ஒன்றின் மீது துப்பாக்கிதாரிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் குறைந்தது 7 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் டசின் கணக்கானோர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பேருந்து சாரதி
பப்புவா நியூ கினியாவின் எங்க மாகாணத்தில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. செவ்வாய் மதியம் 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட பேருந்தின் மீது ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில் சாரதி உட்பட 7 ஆண் பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு பேருந்து சாரதி வாகனத்தைத் திருப்பி வபாக் மருத்துவமனைக்கு விரைந்ததாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 50 நிமிடங்கள் பயணத்திற்கு பிறகு மருத்துவமனைக்கு சென்ற நிலையில், காயங்கள் காரணமாக சாரதி மரணமடைந்ததாக கூறப்படுகிறது. வபாக் மருத்துவமனையில் காயம்பட்ட ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாயமான 17 பயணிகள்
ஆனால், தாக்குதலை அடுத்து மாயமான 17 பயணிகள் தொடர்பில் தகவல் இல்லை என்றே பொலிசார் கூறுகின்றனர். மாயமானவர்கள் உயிருடன் உள்ளனரா அல்லது காயம் பட்டுள்ளனரா என்ற தகவல் இல்லை என்றே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
புதர்களுக்குள் மறைந்திருக்கலாம் அல்லது அண்டை சமூக மக்களுடன் தங்கியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |